Tuesday, November 5, 2019

இந்த சஷ்டி கவசம் கேட்பது நல்லதா - Healer Baskar


107 :  கந்த சஷ்டி கவசம் நல்லதா? அதை தினமும் கேட்கலாமா??நீங்கள் சீக்ரெட் படம் பார்க்க சொன்னீர்கள் நான் பார்த்துவிட்டேன். அந்தப்படத்தில் நல்வார்த்தைகள் மட்டுமே பேசவேண்டும் என்று கூறுகிறார்கள் .ஆனால், கந்த சஷ்டி கவசத்தில்"காட்டேரி, பேய், சண்டாளர் , நகம் மயிர்நீள்முடி மண்டையும் மண்ணில் புதைத்த வஞ்சனை தனை" இதுபோன்ற வார்த்தைகள் வருகிறது எனவே எனக்கு குழப்பமாக இருக்கிறது? தெளிவுபடுத்துங்கள்.?

பதில்: கந்தசஷ்டிகவசம் நல்லது அதை தினமும் கேட்கலாம்.

நான் சீக்ரெட் படத்தை பார்க்க சொன்னேன் அந்த படத்தில் நல்வார்த்தைகள் மட்டுமே பேசவேண்டும் என்று கூறுகிறார்கள் உண்மைதான்.

நாம் பேசும் பொழுது நாம் எழுதும் பொழுது இனிமேல் முடிந்தவரை எந்த எந்த இடங்களில் பாசிட்டிவான நேர்மறை வார்த்தைகளை கொடுக்க முடியுமா கொடுக்கலாம்.

ஆனால் எல்லா இடங்களிலும் 100 சதவிகிதம் பாசிட்டிவான நேர்மறையான வார்த்தைகளை மட்டுமே நாம் எதிர்பார்க்க முடியாது.

கந்த சஷ்டி கவசம் எழுதிய 1820 இல் பிறந்த தேவராய சுவாமிகள் ஒரு வேளை சீக்ரட்  படத்தை பார்த்தபிறகு கந்த சஷ்டி கவசத்தை எழுதி இருந்தால் அவர் கண்டிப்பாக வேறு வார்த்தைகளை பயன்படுத்தி எழுதி இருப்பார்.

சீக்ரெட் படத்தை பார்ப்பதற்கு முன்னால் கந்தசஷ்டிகவசம் உங்களுக்கு நல்லதாக தோன்றியது , ஆனால் சீக்கிரம் படத்தை பார்த்த பிறகு அதே கந்தசஷ்டிகவசம் உங்களுக்கு எதிரியாக தோன்றுகிறது.

எனவே ஏற்கனவே உள்ள விஷயங்களில் நீங்கள் நூறு சதவிகிதம் நேர்மறையான வார்த்தைகளை எதிர்பார்க்க வேண்டாம். எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதை மட்டுமே பார்த்தால் போதும்.

உதாரணமாக கந்த சஷ்டி கவசத்தில் 100 இடங்களில் 10 இடங்களில் நெகட்டிவான எதிர்மறை வார்த்தைகள் வந்து இருக்கலாம், பரவாயில்லை ,உச்சரியுங்கள்.

நல்ல எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் இருக்கும் சில எதிர்மறை வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு அந்த வார்த்தைகளை கேட்கும் பொழுது எதிர்மறை சிந்தனைகள் தோன்றுகிறது என்றால் நீங்கள் கந்த சஷ்டி கவசத்தை கேட்பதை நிறுத்தி விடலாம்.

எந்த காரியம் செய்கிறோம் , எந்த வார்த்தையை உச்சரிக்கிறோம் என்பது முக்கியமல்ல . ஒரு செயலை செய்த பிறகு நம் ஆழ்மனதில் எப்படி பதிவாகிறது என்பதுதான் முக்கியம்.

ஒரு காரியம் செய்த பிறகு நமது தன்மை ஒரு படி மேலே சென்று விட்டால் அது நல்ல காரியம்,  எனவே அதே தொடரலாம் . அல்லது ,ஒரு காரியம் செய்த பிறகு நமது நிலை ஒரு படி கீழே சென்றால் அந்த காரியத்தை நாம் நிறுத்திவிட வேண்டும்.

-- ஹீலர் பாஸ்கர்
www.anatomictherapy.org

1 comment: