கேள்வி எண் 104 : தியானம் மற்றும் யோகா செய்யும் பொழுது கண்களில் கண்ணீர், வாயில் உமிழ் நீரும் சுரக்கிறது .இது நல்லதா?. கெட்டதா?.
பதில் : தியானம் செய்யும் பொழுது கண்களில் கண்ணீரும் வாயில் உமிழ்நீர் சுரக்கிறது என்றால் இது கெட்டது அல்ல, கண்டிப்பாக நல்லதே.
தியானம் செய்யும் பொழுது சிலருக்கு கண்களில் நீர் வரலாம் சிலருக்கு சளி வரலாம், சிலருக்கு காய்ச்சல் வரலாம், சிலருக்கு லூஸ் மோசன் எனப்படும் தண்ணீராக மலம் வரலாம், சிலருக்கு தூக்கம் வரலாம் ,சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படலாம், சிலருக்கு காது குடைய வேண்டும் போல் உணரலாம், சிலருக்கு வேர்வை வரலாம் ,சிலருக்கு சிறுநீர் வரலாம் ,சிலருக்கு மூத்திரம் வரலாம் சிலருக்கு உடல் அசதி வரலாம்.
இவை அனைத்துமே கெட்டது கிடையாது. கண்டிப்பாக நல்லதே, இவை அனைத்தும் ஒருவருக்கே வராது இதில் ஏதாவது ஒன்றோ இரண்டோ மூன்றோ வரலாம். இல்லை வராமல் கூட இருக்கலாம்.
இதன் காரணம் என்னவென்றால், ஒன்று கழிவுகள் வெளியாகிறது, இரண்டு அந்த உறுப்பு தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கிறது , மூன்று அந்த உறுப்பு தான் பல வருடமாக செய்ய முடியாத வேலையை இப்பொழுது சுதந்திரமாக செய்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
உடனே இதுபோன்ற விஷயங்கள் எத்தனை நாள் நடக்கும்? என்று கேட்காதீர்கள் .அது எனக்கே தெரியாது . அவரவர் உடலில் உள்ள கழிவுகளை பொறுத்து , நோயைப் பொறுத்து சிலருக்கு ஐந்து நாளும் சிலருக்கு 50 நாளும் இப்படி மாறி மாறி நடக்கலாம் .எனவே எது வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் நல்லது என்று புரிந்து கொள்ளுங்கள்.
உதாரணமாக சாராயம் குடித்து விட்டு ஒருவர் சிரிக்கிறார் என்றால் சாதாரணமாக அவரால் சிரிக்க முடியவில்லை என்று அர்த்தம் . சாராயம் குடித்துவிட்டு ஒரு அழுகிறார் என்றால் அவர் சாதாரண வாழ்க்கையில் அழ முடியவில்லை என்று அர்த்தம் , சாராயம் குடித்துவிட்டு ஒருவர் ரோட்டில் போகும் நபரை அவருடன் வம்பு சண்டை இழுத்தால் அவருக்கு சாதாரணமாக வீரம் இல்லை என்று அர்த்தம் , சாராயம் குடித்துவிட்டு மனைவியை அடித்தால் அவருக்கு சாதாரணமாக மனைவிக்கு மேல் பயம் உள்ளது என்று அர்த்தம்.
சாராயம் குடித்தால் எப்படி ஒருவர் தன்னால் முடியாத விஷயத்தை செய்கிராறோ , அது போல தியானம் யோகா என்பது இயற்கையான நல்ல சாராயம் . எனவே நமது உடல் பல வருடமாக செய்யமுடியாத நல்ல வேலைகளை ஆரம்பிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனவே யோகா , தியானம் செய்யும் பொழுது எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள், காத்திருங்கள், அது தானாக வரும் தானாக சரியாகிவிடும். கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். கண்டிப்பாக தியானமும் யோகாவும் உங்களுக்கு நல்லதையே செய்யும்.
இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்
www.anatomictherapy.org.
No comments:
Post a Comment