கேள்வி எண் 105:
எனக்கு படுத்தால் உடனே தூக்கம் வருகிறது ஆனால் உட்கார்ந்து துவக்கினால் தூக்கம் வர மாட்டேங்குது. நீங்கள் உட்கார்ந்து தூங்குவது நல்லது என்று கூறி இருக்கிறீர்கள். எனக்கு குழப்பமாக இருக்கிறது.நான் என்ன செய்வது?
பதில் : நான் உட்கார்ந்து தூங்குவது மிகவும் நல்லது என்று கூறியிருக்கிறேன் .ஆம் உண்மை. ஆனால் அது யாருக்கு என்றால் , படுத்தால் யாருக்கு தூக்கம் வருவதற்கு பல மணி நேரம் ஆகிறதோ அவர்களை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆரம்பத்தில் உட்கார்ந்து துவங்கி ,அதன் பிறகு படுத்து தூங்குவது நல்லது என்று கூறுகிறேன்.
உங்களுக்கு படுத்தவுடன் தூக்கம் வருகிறது என்றால் நீங்கள் உட்கார்ந்து தூங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவேளை படுத்தவுடன் தூக்கம் வருகிறது ஆனால் கெட்ட கெட்ட கனவு வருகிறது என்றால் நீங்கள் உட்கார்ந்து தூங்கி விட்டு பிறகு படுத்து தூங்கலாம்.
ஒருவேளை படுத்தவுடன் தூக்கம் வருகிறது ஆனால் தூங்கியது போலவே இல்லை, பகலில் உடல் அசதியாக இருக்கிறது , நான் நிம்மதியாக தூங்கியது போல் இல்லை என்று கூறினால், நீங்கள் முதல் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் உட்கார்ந்து கண்களை மூடி தூங்கி விட்டு அதன் பிறகு படுத்து தூங்கலாம்.
ஆனால் படுத்தவுடன் நன்றாக தூக்கம் வருகிறது, எனக்கு கெட்ட கனவு எதுவும் வருவதில்லை , எனக்கு கனவே வருவதில்லை, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், எனக்கு அசதி இல்லை என்று கூறினால் ,நீங்கள் உட்கார்ந்து தூங்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்.
PH : +91- 9842452508.
No comments:
Post a Comment