Tuesday, November 12, 2019

மரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம்!


மரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம்!


கேள்வி எண் 115 விதைகள் இல்லாமல் மரத்தை உருவாக்க முடியுமா?

பதில்: விதைகள் இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்துக்கொண்டு மரங்களை உருவாக்க முடியும்.

மரத்தின் ஒரே ஒரு இலையை பறித்து அதை இளநீரில் ஊறவைத்து, பின் சுமார் 30 டிகிரி வெப்பநிலை மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் வைத்து பராமரித்தால் 4 முதல் 5 வாரங்களில் இலையில் இருந்து வேர் வளரத் தொடங்கி, 8 முதல் 10 வாரத்தில் அது ஓர் செடியாக வளரத் தொடங்கி விடும்.

இதன் மூலமாக உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறைகிறதாம். அதே நேரத்தில் அதிகளவில் மகசூலும் கிடைக்கும்.

இந்த அற்புத வித்தையை கண்டுபிடித்தவர்
கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம்  , ஈடன் நர்சரி கார்டன்ஸ் உரிமையாளர்.S. ராஜரத்தினம்.

 தமிழகத்தில் மட்டும் சுமார் 90 கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதை கற்றுக் கொடுத்துள்ளார்.

இவரது அற்புதமான கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.

இவரை நாம் பாதுகாக்க வேண்டும் .இவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் .இவருக்கு நாம் சப்போர்ட் செய்ய வேண்டும் .இதன் மூலமாக இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு நாம் அவருடன் சேர்ந்து பணி செய்வோமாக.

மேலும் விவரங்களுக்கு.
.S. ராஜரத்தினம்
23-15, கருப்பாயம்மாள் பண்ணை, வெள்ளிபாளையம் சாலை, மேட்டுப்பாளையம், கோவை.
pH :  9486094670  edennurserygardens@gmail.com  www.edunnurserygardens.com.

இப்படிக்கு .
ஹீலர் பாஸ்கர்.
www.anatomictherapy.org.

நாடிசுத்தி மூச்சு பயிற்சியின்போது ஒருநாசி அடைப்பிற்கு தீர்வு - ஹீலர் பாஸ்கர்


கேள்வி எண் 114: நாடி சுத்தி மூச்சு பயிற்சி என்பது இரு நாசியிலும் மாறிமாறி மூச்சு இழுத்து விட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

எனக்கு ஒரு நாசிகள் வழியாக மட்டுமே காற்று உள்ளே சென்று வெளியே வருகிறது மற்றொரு நாசி எப்பொழுதுமே அடைத்திருக்கிறது.

இதன் காரணம் என்ன? தீர்வு என்ன?

பதில் : இதற்குக் காரணம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.

எனவே நீங்கள் முதலில் உடல் பயிற்சிகள் சூரிய நமஸ்காரம் ஆசனங்களை வாக்கிங் ஜாக்கிங் மற்றும் ஸ்கிப்பிங் போன்ற உடல் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை மட்டும் செய்யுங்கள்.

மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டாம்.

வாரம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள் 

எப்பொழுது இருபக்கமும் மூச்சுக்காற்று சென்று வருகிறதோ அப்பொழுது மூச்சுப்பயிற்சி செய்தால் போதும்.

உடலை ஒழுங்கு செய்த பிறகுதான் மூச்சை ஒழுங்கு செய்ய முடியும்.

அன்னமய கோசம் என்ற உடல் ஒழுங்காக இருந்தால்தான் பிராணமய கோசம் என்ற மூச்சு ஒழுங்காக இருக்கும்.

பிராணமய கோசம் ஒழுங்காக இருந்தால்தான் மனோஅமய கோசம் எனப்படும் மனம் ஒழுங்காகும்.

எனவே முதலில் உடலை ஒழுங்கு செய்யும் பயிற்சிகளை மட்டும் செய்துவாருங்கள்.

உங்களுடன் ஆரோக்கியம் அடைந்தபிறகு மூச்சுப் பயிற்சி செய்யலாம்.

இப்படிக்கு 
ஹீலர் பாஸ்கர்
பானு வீட்டுக் கல்வி முறை
+918220667135.

Saturday, November 9, 2019

பூரான் கடிக்கு மருந்து - ஹீலர் பாஸ்கர்

கேள்வி எண் 112 : பூரான் கடிக்கு இயற்கை வைத்தியம் என்ன?

பதில் : பூரான் கடிக்கு இரண்டு மருந்துகள் உள்ளது . 

ஒன்று பூரான் கடித்த இடத்தில் வெளிப்புறமாக தடவும் மருந்து.

இரண்டு விஷத்தை முறிக்கும் வயிற்றுக்குள் கொடுக்கும் மருந்து.

வெளிப்புறமாக பூரான் கடித்த இடத்தில் தடவுவதற்கு மூன்று வகையான மருந்துகள் உள்ளது.

ஒன்று சுண்ணாம்பை தடவலாம்.

இரண்டு வெற்றிலையையும் குறு மிளகையும் மை போல அரைத்து தடவலாம்.

மூன்று குப்பை மேனி இலையும் மஞ்சளையும் ஒன்றாக அரைத்து தடவலாம்.

உற்புறமாக வயிற்றுக்கு கொடுப்பதற்கு மூன்று மருந்துகள் உள்ளது.

ஒன்று சிறுகுறிஞ்சான் இலையை ஐந்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

இரண்டு ஐந்து வேப்ப இலையை கஸ்தூரி மஞ்சளுடன் கலந்து அரைத்து உருண்டை போல் செய்து அதை சாப்பிட வேண்டும்.

மூன்று ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி விட்டு ஐந்து மிளகோடு சேர்த்து அரைத்து அதை சாப்பிட வேண்டும்.

இங்கே நாம் சொல்லிய உட்புறம் மூன்று மருந்தும் வெளிப்புற மூன்று மருந்தும் மொத்தம் ஆறு மருந்தும் மொத்தமாக கண்டிப்பாக எடுக்க  வேண்டிய அவசியம் இல்லை. இதில் எது எது வாய்ப்பு இருக்கிறதோ அதை பயன்படுத்தலாம். இதில் ஒன்றோ இரண்டோ செய்ய முடியவில்லை என்பதற்காக வருத்தப்பட தேவையில்லை.

பூரான் கடித்தால் மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் 24 மணி நேரத்திற்கு லேசாக கடுகடுப்பாக இருக்கும் .எனவே அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பூரான் கடிக்காக பெயின்கில்லரோ,  ஆன்டிபயாடிக்கோ எடுக்க வேண்டிய அவசியமில்லை.

கண்டிப்பாக அது ஆபத்தை ஏற்படுத்தாது.

இந்த வைத்தியத்தை கற்றுக்கொடுத்த எனது நண்பர் பொள்ளாச்சி ஹீலர் குமார் அவர்களுக்கு நன்றி.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
மூன்று நாள் வகுப்பு .
சென்னை.
2019 - NOV - 15 , 16 , 17.
PH : +918870666966.

Thursday, November 7, 2019

அல்சருக்கு தீர்வு - Healer Baskar


கேள்வி எண் 111: அல்சர் இருப்பவர்களுக்கு பத்தில் எட்டு பேருக்கு மனதில் பயம் வருகிறது , உடல் நடுங்குகிறது .இதற்கு காரணம் என்ன? தீர்வு என்ன?

பதில்:  அல்சர் இருப்பவர்களுக்கு பயம் வரும் , உடல் நடுக்கம் வரும்.

இதற்கு காரணம் அல்சர் அல்ல உடலில் சக்தி குறைவதே.

நாம் சாப்பிடும் சாப்பாடு தான் சத்துப் பொருளாக மாறி எல்லா செல்களுக்கும் போகிறது .

எப்பொழுது அல்சர் இருக்கிறதோ அப்போது சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது .எனவே செல்களுக்குத் தேவையான சத்து கிடைக்காது. எனவே உடல் நடுங்குகிறது மேலும் எப்போது நாம் வீக்காக இருக்கிறோமோ அப்போது பயமாக உணர்வோம். எப்பொழுது சக்தி அதிகமாக இருக்கிறதோ அப்போது தைரியம் வரும் .

தைரியம் என்பது சக்தி மிகுதி . பயம் என்பது சக்தி குறைவு .

அல்சரினால் மட்டும்தான் பயமும் நடுக்கமும் வரும் என்று அர்த்தமில்லை. உடலில் எப்பொழுது சக்தி குறைகிறதோ அப்போது இயற்கையாகவே பயமும் நடுக்கமும் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே பயத்துக்கும் நடுக்கத்திற்கு தனியாக சிகிச்சை செய்ய அவசியமில்லை. உடலில் சக்தி அதிகம் செய்வதற்கு பயிற்சி செய்தால் கண்டிப்பாக நடுக்கத்தையும் பயத்தையும் வராமல் பார்த்துக்கொள்ளலாம் 

அல்சருக்கு என்று தனியாக சிகிச்சை கிடையாது .

எனது  ஐந்து நாள் வகுப்புக்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும் . அல்லது ஐந்து நாள் வீடியோவை முழுவதுமாக பார்க்க வேண்டும் .அல்லது 5 நாள் வகுப்பு ஆடியோவை முழுவதுமாக கேட்க வேண்டும் .

அதில் சொன்ன வழிமுறைகளை சரியாக பயன்படுத்தினால் உடலில் சக்தி அதிகமாகி அதன் மூலமாக அல்சர் குணமாகும். அல்சர் குணமான பிறகு தான் பயமும் நடுக்கமும் நிற்கும்.

நீங்கள் என்ன எந்த கேள்வி கேட்டாலும் ஐந்து நாள் வகுப்பு வீடியோ என்று சொல்கிறீர்கள் என்று சிலர் கேட்கலாம்.

உதாரணமாக , காலில் ஆணி வந்தால் மஞ்சள் தூளையும்,  மருதாணி தூளையும் கலந்து வைத்தால் 30 நாளில் சரியாகிவிடும் .இதற்கு ஐந்து நாள் வகுப்புக்கு வர வேண்டிய அவசியமில்லை.சில வியாதிகளுக்கு வீட்டு வைத்தியம் செய்து சரி செய்து சரி செய்து கொள்ளலாம். 

ஆனால் சில வியாதிகள் உடலையும் மனதையும் முழுவதையும் சரி செய்தால் மட்டுமே சரியாகும்,  என்பதால்தான் நான் இதுபோல கூறுகிறேன்.

தினமும் காலை பழைய சாதம் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

பழைய சாதம் செய்வது எப்படி??

இரவு , பாரம்பரிய அரிசியை பிரஷர் குக்கரில் சமைத்து,  நன்றாக ஆறும் வரை காத்திருந்து,  அதன் பிறகு அந்த சாதத்தில் 5 முதல் 10 மடங்கு தண்ணீர் ஊற்றி,  இரவு முழுவதும் மூடி வைத்து காலையில் அந்த சாதத்தையும் தண்ணீரையும் நன்றாக கையில் பிசைந்து , சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக கட் செய்து அதில் கலந்து , கொஞ்சமாக மோர் அல்லது தயிர் கலந்த, தேவையான அளவு உப்பு கலந்நது காலை உணவாக இந்த பழைய சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்,
விட்டமின் பி12 கிடைக்கும் ,உடல் உஷ்ணம் இருப்பவர்களுக்கு உடல்  உஷ்ணம் குறையும், அனைத்து வியாதிகளும் குணமாகும்.

பழைய சாதம் தயாரிப்பதற்கு வடித்த சாதத்தை பயன்படுத்தக்கூடாது ,எலக்ட்ரிக்கல் குக்கரை பயன்படுத்தக்கூடாது .

பிரஷர் குக்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிரஷர் குக்கர் இல்லாதவங்க ஒரு பாத்திரத்துல அரிசி வெச்சு தண்ணி அளவா வைத்து வடிக்காமல் சமையல் செஞ்சு அந்த சாப்பாட்டை பயன்படுத்தலாம்‌.

பிரஷர் குக்கர் விசில் நாமாக எடுத்து விடக்கூடாது, அது தானாக அடங்கும் வரை காத்திருக்க வேண்டும்.

இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்
அமைதியும் ஆரோக்கியமும் --மாத இதழ்
+918883805456

Wednesday, November 6, 2019

The truth behind the blood pressure (BP) - Healer Baskar

How to save us from cellphone radiation - Healer Baskar





கேள்வி எண் 110 : செல்போன் ரேடியேசனிலிருந்து நம்மை எப்படி காப்பாற்றிக்கொள்வது?

பதில் : செல்போனில் இருந்து ரேடியேஷன் வருகிறது இது மனித உடலுக்கு ஆபத்து என்று பலரும் கூறுகிறார்கள் இது உண்மைதான்.

ரேடியேஷன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் மனிதனுக்கு ஆபத்து என்று கூறுகிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. ரேடியேஷன் மிகக் குறைவாக இருந்தால் குறைவான ஆபத்து அதிகமாக இருந்தால் அதிகமான ஆபத்து

எனவே ரேடியேஷன் என்றாலே ஆபத்து தான். இதற்கு ஒரு அளவு வைக்க முடியாது .விஷம் என்றால் விஷம் தான் , குறைந்த விஷம் , அதிக விஷம் என்று இருக்கிறதல்லவா அதேபோல ரேடியேஷன் என்றாலே விஷம் தான்.

எனவே ரேடியேஷன் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது கட்டாயமாகும்.

அதனால் இனிமேல் செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று நான் கூறமாட்டேன்.

 செல்போனை பயன்படுத்தாமல் இருந்தால் மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுது செல்போன் இல்லாமல் வாழ்வது முடியாத காரியமாகி விட்டது .

நீங்கள் ஒருவேளை செல்போனை பயன்படுத்தாமல் இருந்தால் ரேடியேசன் தாக்குதல் வராது என்று கூறமுடியுமா ?? உங்கள் வீட்டில் மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்,  அலுவலகத்தில் மற்றவர்கள் பயன்படுத்துவார்கள் , நீங்கள் அமர்ந்திருக்கும் பஸ்ஸில் 50 பேர் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்,  அதிலிருந்த ரேடியேசன் உங்களைத் தாக்காதா ???.

நாம் இருக்கும் ஊரில் பல செல்போன்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை சூழ்ந்து இருக்கிறது .பல ரேடியோக்களில் கதிர்வீச்சுக்கள் நம்மை சூழ்ந்து இருக்கிறது .பல சாட்டிலைட் டிவிகளில் ரேடியேசன் சூழ்ந்திருக்கிறது. பக்கத்து காவல்நிலையத்தில் வாக்கிடாக்கி உட்பட நம்மை சுற்றி ஆயிரம் விதமான கதிர்வீச்சுக்கள் நம்மை சுற்றி இருக்கிறது. அதில் இருந்து எப்படி நம்மை காப்பாற்றிக் கொள்வது??.

சட்டைப் பையில் செல்போனை வைக்க வேண்டாம் அங்குதான் இருதயம் இருக்கிறது என்று கூறி இடுப்பில் மாற்றிக்கொள்கிறார்கள். இடுப்பில் கிட்னி இருக்கிறதே அப்பொழுது அது பாதிக்காதா??. உடம்பில் எந்த இடத்தில் வைத்தாலும் உடல் முழுவதும் பாதிக்கும்.

நீங்கள் செல்லும் அனைத்து வீடுகளிலும் கடைகளிலும் wi-fi இருக்கிறது .அதனது தாக்கம் நீங்கள் அறியாமல் உங்களுக்குள் செல்வது உங்களுக்கு தெரியுமா?

கதிர் வீச்சு என்பது பிக்பாஸ் போன்றது. நீங்க ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

எனவே செல்போனிலிருந்து வரும் ரேடியேஷனால்  ஏற்படும் சக்தி இழப்பை விட , நாம் நமது உடலில் உள்ள சக்தியை அதிகரிப்பதன் மூலமாக நம்மளை காப்பாற்றிக் கொள்ளலாம்.

எனவே நாம் மூச்சுப் பயிற்சி ,தியானம் ,வாக்கிங், ஜாக்கிங் ,உணவை ஒழுங்காக சாப்பிடுதல், தண்ணீரை ஒழுங்காக குடித்தல் ,மூச்சுக்காற்றை ஒழுங்கு செய்தல், தூய்மையான காற்றில் வாழ்தல் உடலில் உஷ்ணத்தை ஒழுங்கு செய்தல், உடலில் PH மதிப்பை ஒழுங்கு செய்தல்,  போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருத்தல் , சக்தி செலவாகும் விஷயங்களை நிறுத்துதல் , சக்தி அதிகமாகும் விஷயங்களை அதிகரித்தல்,  தன்னை மறந்து தூங்குதல்,  கர்ம யோகம்,  கிரியா யோகம் , பக்தியோகம்,  ஞானயோகம் ஆகிய யோகங்கள் செய்தல் இது போன்ற காரியங்களை அதிக படுத்துவதன் மூலமாக நம் சக்தியை அதிகப்படுத்தி,  நாம் ரேடியேசன் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதே சிறந்த வழி.

எனவே இனிமேல் கதிர்வீச்சை பற்றி யோசித்து பயப்படாமல்,  நமது சக்தியை அதிகப்படுத்தும் வேலைகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வரும் நாட்களில் இந்த ரேடியேஷன் அளவு அதிகமாகி கொண்டே தான் போகும் எனவே நாமும் சக்தியை அதிகப்படுத்தி அதற்கான வழிமுறைகளை அதிகரித்துக் கொண்டே தான் செல்லவேண்டும்.

எனவே ஒரு நாளில் 24 மணிநேரத்தில் பணத்திற்காக, குடும்பத்திற்காக, வியாபாரத்திற்காக , அலுவலகத்திற்காக  மற்றும் புகழுக்காக நேரம் செலவு செய்வதை சற்று குறைத்து விட்டு , உடலுக்காக , மனதிற் காக, உயிருக்காக , செல்ப் ஹேர் எனப்படும் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்காக,  ஆன்மீகத்திற்காக,  ஆரோக்கியத்திற்காக மற்றும்  சக்தியை அதிகரிப்பதற்காக நேரத்தை செலவிட வேண்டும் . இதுதான் சிறந்த வழி.

நல்லெண்ணெயில் வீட்டில் தீபம் இடுதல் ,நாட்டு மாட்டு சாணியை கொண்டு வீட்டில் மோழுகுதல்,  நல்ல மரங்களை வீட்டிற்கு அருகே வளர்த்தல், மண் மற்றும் சுண்ணாம்பை கொண்டு வீடு கட்டுதல் , டிவி ,செல்போன் wi- fi இல்லாமல் வாழுதல் , இதுபோன்ற நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. இருந்தாலும் நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் இதைப் பயன்படுத்துவது சிரமம்.

செல்போன் ரேடியேஷனை இயற்கை முறையில் குறைப்பது சம்பந்தமாக யாருக்காவது யோசனை இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் அதை புரிந்து கொண்டு அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

ஒரு முக்கியமான விஷயம்,  நீங்கள் சொல்லும் ஐடியா , செலவில்லாமல் இருக்க வேண்டும்.

ஒரு கம்பெனியின் பொருளை வாங்குங்கள் , செல்போனில் ஓட்டுங்க , வீட்டில மாட்டுங்க,  3000 கொடுங்க , 10000 கொடுங்க என்று கூறாமல் இருக்க வேண்டும்.

எளிமையான, சுலபமான, செலவில்லாத , ஐடியாக்களை மட்டுமே நான் வரவேற்கிறேன்.

இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்
+91-9944221007

( மூன்று நாள் யோகா விபாசனா எனப்படும் சைலண்ட் வகுப்பு சென்னையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. கலந்து கொள்ளுங்கள் )https://youtu.be/7UdzQ6iIbZM

திருக்குறளில் 1300 குறள்களைதான் திருவள்ளுவர் எழுதினார் - பசுமரத்தாணி


திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

இப்படி சொல்பவர் பெரியாரோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் ஒருவரோ அல்ல.

திருக்குறளை ஆய்வு செய்து திருக்குறளில் உள்ள இடைச்செருகல்களை ஆதாரங்களுடன் நிறுவியவர் #வ_உ_சி அவர்கள்.ஆம் இந்திய சுதந்திர போராட்ட தியாகி என புகழப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களேதான். வ.உ.சி.கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறளில் #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,#வான்_சிறப்பு, #நீத்தார்_பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை அல்ல.அவை #இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறுகிறார் வ.உ.சி.“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரிய சார்பானதாக இருப்பதை ஏற்க மறுத்து (அப்போது சுயமரியாதை இயக்கமோ,பகுத்தறிவு கருத்துக்களோ வீரியமாக பேசப்படாத காலம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.) ஏற்கும்படி இருக்கும் மணிகுடவர் எழுதிய திருக்குறள் உரையிலிருந்து திருக்குறள் அறத்துப்பால் மணிக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917 ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.

1930 - 1932 களில் வெளிவந்த ''தமிழ்ப் பொழில்'' (துணர் 5/மலர் 6) எனும் இதழில் பாயிர ஆராய்ச்சி எனும் தலைப்பில் (பக்கம்: 232-237)எழுதியுள்ள கட்டுரையில் வ.உ.சி.அவர்கள் இந்த ஆய்வுகளை தொடராக எழுதியுள்ளார்.

பாயிர ஆராய்ச்சி எனும் ஆய்வு கட்டுரையில் வ.உ.சி அவர்கள் திருக்குறளின் இடைச்செருகல்கள் குறித்து எழுதியுள்ள கருத்துக்களின் சாரம் :

திருக்குறளின் இம்மூன்று அதிகாரங்களும் தற்காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.

1. கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை பாடல்களில் பிற பாடல்களைப்போலச் சொற்செறிவும் பொருட்செறிவும் இல்லை.

2. கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய பாடல்களின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

3. மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.

4. மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங்களையும் ஒருவரே எழுதியிருக்க முடியாது. (வ.உ.சியின் இக்கருத்து விரிவான ஆய்வுக்குரியது).

5. துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றியிருக்க முடியாது.

6. மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றரிவாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.

7. திருக்குறள் 10 என எண்ணிக்கையில் இருக்கும் போது 10ன் மடங்குகளாக 130 அதிகாரமும் 1300 குறள்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------

திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தை எழுதி இருக்கிறார் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டார் என ஏமாற்றி வந்தவர்கள் இப்போது திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயலும் அயோக்கியத்தனமான முயற்சியில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருக்குறளே அல்ல.அவை திருவள்ளுவர் எழுதியவையும் அல்ல.இந்த 3 அதிகாரங்களும் இடச்செருகல்களே என்கிற வ.உ.சி.அவர்களின் ஆய்வுக்கட்டுரையை நாம் மீள வாசிக்க வேண்டியதும் அதனை பரப்புவதும் அவசியமாகும்.

Tuesday, November 5, 2019

குழந்தைகளின் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு - Healer Baskar

https://youtu.be/F8DI8lEhRic

Watch the video...

உடல் செல்களை புதுப்பித்தல் - Healer Baskar

https://youtu.be/Bf-chTFk504

குள்ளமாக இருப்பவர்கள் உயரமாவது எப்படி - Healer Baskar


கேள்வி 109 : குள்ளமாக இருக்கும் நான் சீக்கிரமாக உயரமாக வளர்வது எப்படி?.

பதில் : நான் பள்ளியில் படிக்கும் பொழுது மிகவும் குள்ளமாக இருப்பேன்.

எனக்கு பாஸ்கர் என்ற பெயர் மட்டுமல்லாமல் பாண்டியன் என்ற பெயரும் உண்டு.

 எனது வீட்டில் என்னை பாண்டி என்றுதான் கூப்பிடுவார்கள். நான் சிறுவயதில் குள்ளமாக இருந்ததால் என்னை "கூலப்பாண்டி"  "கூலப்பாண்டி"  என்று தான் கூப்பிடுவார்கள்.

நான் " உயரமாக வளர வேண்டுமா"  என்ற தலைப்பிலுள்ள உலகிலுள்ள அனைத்து புத்தகத்தையும் படித்து விட்டேன். ஆனால் அதில் சொல்லப்பட்ட விஷயங்களை ஃபாலோ செய்து என்னால் உயரமாக முடியவில்லை.

கடைசியாக நான் எங்கள் வீட்டில் உள்ள அலமாரியைப் பிடித்து தினமும் 10 நிமிடம் தொங்கித்தான் நான் உயரமானேன்.

கம்பியையோ,  ஸ்லாபையோ ,அலமாரியையோ அல்லது  எதையாவது பிடித்து தினமும் 10 நிமிடம் தோங்கினால் நமது உடல் எடை கீழ்நோக்கி தொங்குவதால் உயரமாக வளர முடியும்.

இது ஒன்று தான் எளிமையான, உண்மையான வழி எனவே தினமும் தோங்குங்கள் நீங்கள் உயரமாக வளருவீர்கள்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர். pH : 9944221007.

One day class ( 5 topics )
UTHAMAPALAYAM ( theni dt)
10.11.2019.

கூரை மேலிருந்து விழும் மழைநீர் நல்லதா? - Healer Baskar


கேள்வி 108 : பைபர் கூரையின் மேல் விழுந்து சேகரித்த மழை நீரை பயன்படுத்தலாமா ? ஆபத்தா ? நல்லதா ?  கெட்டதா?.

பதில்:  மழைநீரை எந்த ஒரு பொருள் மேல் விழுகாமல் நேரடியாக ஒரு பாத்திரத்தில் பிடிப்பதுதான் மிக மிக சிறந்தது.

மழைநீரை,  மழை ஆரம்பித்த ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கு பிடிக்கக் கூடாது .ஏனென்றால் வானத்தில் உள்ள குப்பைகள் கலந்து வரும்.

மொட்டைமாடியில் ஒரு வெள்ளை பருத்தி துணியை நான்கு புறமும் கயிறு கட்டி அதற்கு நடுவே ஒரு கல்லை வைத்தால்,  வெள்ளைத்துணியில் நடுப்பக்கத்தில் தண்ணீர் கிடைக்கும் அதை பாத்திரத்தில் பிடிக்க வேண்டும்.

வெறும் பாத்திரத்தை வைத்தால் தண்ணீர் குறைவாக சேரும் வெள்ளை துணி எந்த அளவு  இருக்கிறதோ அந்த அளவு அதிக தண்ணீர் கிடைக்கும்

இந்த சேகரிக்கப்பட்ட மழைநீரை கண்ணாடி பாட்டிலில் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வைத்திருந்தாள் ஆறு வருடம் பாதுகாப்பாக இருக்கும்.

எப்பொழுது மழை நீரில் புழு வருகிறதோ அதன்பிறகு அதை பயன்படுத்த வேண்டாம்.

மழைநீரை தினமும் 100 எம்எல் குடித்துவந்தால் உடலில் அனைத்து வியாதிகளும் குணமாகும் குறிப்பாக சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் குணமாகும்.

நாள் முழுவதும் மழை நீரை குடிக்கக்கூடாது. சாதாரண தண்ணீரைத் தான் குடிக்க வேண்டும் மழைநீரை மருந்தாக மட்டும் பயன்படுத்தலாம்.

மழை நீரை ஒரு நாளில் ஒரு மனிதன் 100 எம்எல் முதல் ஒரு லிட்டர் வரை குடிக்கலாம்.

மொட்டை மாடியில் கூரை மேல் விழுந்து வரும் தண்ணீரை பிடித்து குடிப்பது சரி என்றும் சொல்ல முடியாது.  தவறு என்றும் சொல்ல முடியாது. இது நூறு விஷயத்தை பொருத்தது.

உங்கள் கூரை எந்த பொருளால் செய்யப்பட்டது, காங்கிரிட்டா, பிளாஸ்டிக்கா,  கூரையில் காக்கா கக்கா போய் இருந்ததா, பல்லி செத்து இருந்ததா, பக்கத்து வீட்டுக்காரர் குப்பை போட்டிருக்கிறாரா, அந்தக் குறைகள் என்னென்ன ஒட்டி இருக்கிறது, அந்தக் கூரையில் தண்ணீர் படும்போது கூரையின் தன்மையை தண்ணீர் வருகிறதா? இல்லையா?  இது போன்ற 100 விஷயத்தை பொறுத்து தான் பதில் சொல்ல முடியும்.

எனவே முடிந்தவரை நேரடியாக பாத்திரத்தில் பிடித்து பயன்படுத்துவது சிறந்தது.

ஒருவேளை உங்கள் கூரை தூய்மையாக இருந்து மழைநீர் படும்பொழுது கூரையுடன் வேதியல் விளைவு எனப்படும் கெமிக்கல் ரியாக்சன் ஆகாத பட்சத்தில் நாம் அதை பிடித்து குடிப்பது சிறந்தது.

மழைநீர் தினமும் 100ml முதல் ஒரு லிட்டர் வரை குடித்து வந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் மற்றும் அனைவருக்கும் சிறு நீரக சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் குணமாவதற்கு ஒரு அரிய மருந்தாக இருக்கும் .மழைநீர் சர்வரோக நிவாரணி, அனைவரும் எந்த வயதினரும் எந்த வியாதிக்கும் குடிக்கலாம்.

இப்படிக்கு 
ஹீலர் பாஸ்கர்
+91- 9944221007.

இந்த சஷ்டி கவசம் கேட்பது நல்லதா - Healer Baskar


107 :  கந்த சஷ்டி கவசம் நல்லதா? அதை தினமும் கேட்கலாமா??நீங்கள் சீக்ரெட் படம் பார்க்க சொன்னீர்கள் நான் பார்த்துவிட்டேன். அந்தப்படத்தில் நல்வார்த்தைகள் மட்டுமே பேசவேண்டும் என்று கூறுகிறார்கள் .ஆனால், கந்த சஷ்டி கவசத்தில்"காட்டேரி, பேய், சண்டாளர் , நகம் மயிர்நீள்முடி மண்டையும் மண்ணில் புதைத்த வஞ்சனை தனை" இதுபோன்ற வார்த்தைகள் வருகிறது எனவே எனக்கு குழப்பமாக இருக்கிறது? தெளிவுபடுத்துங்கள்.?

பதில்: கந்தசஷ்டிகவசம் நல்லது அதை தினமும் கேட்கலாம்.

நான் சீக்ரெட் படத்தை பார்க்க சொன்னேன் அந்த படத்தில் நல்வார்த்தைகள் மட்டுமே பேசவேண்டும் என்று கூறுகிறார்கள் உண்மைதான்.

நாம் பேசும் பொழுது நாம் எழுதும் பொழுது இனிமேல் முடிந்தவரை எந்த எந்த இடங்களில் பாசிட்டிவான நேர்மறை வார்த்தைகளை கொடுக்க முடியுமா கொடுக்கலாம்.

ஆனால் எல்லா இடங்களிலும் 100 சதவிகிதம் பாசிட்டிவான நேர்மறையான வார்த்தைகளை மட்டுமே நாம் எதிர்பார்க்க முடியாது.

கந்த சஷ்டி கவசம் எழுதிய 1820 இல் பிறந்த தேவராய சுவாமிகள் ஒரு வேளை சீக்ரட்  படத்தை பார்த்தபிறகு கந்த சஷ்டி கவசத்தை எழுதி இருந்தால் அவர் கண்டிப்பாக வேறு வார்த்தைகளை பயன்படுத்தி எழுதி இருப்பார்.

சீக்ரெட் படத்தை பார்ப்பதற்கு முன்னால் கந்தசஷ்டிகவசம் உங்களுக்கு நல்லதாக தோன்றியது , ஆனால் சீக்கிரம் படத்தை பார்த்த பிறகு அதே கந்தசஷ்டிகவசம் உங்களுக்கு எதிரியாக தோன்றுகிறது.

எனவே ஏற்கனவே உள்ள விஷயங்களில் நீங்கள் நூறு சதவிகிதம் நேர்மறையான வார்த்தைகளை எதிர்பார்க்க வேண்டாம். எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதை மட்டுமே பார்த்தால் போதும்.

உதாரணமாக கந்த சஷ்டி கவசத்தில் 100 இடங்களில் 10 இடங்களில் நெகட்டிவான எதிர்மறை வார்த்தைகள் வந்து இருக்கலாம், பரவாயில்லை ,உச்சரியுங்கள்.

நல்ல எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் இருக்கும் சில எதிர்மறை வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு அந்த வார்த்தைகளை கேட்கும் பொழுது எதிர்மறை சிந்தனைகள் தோன்றுகிறது என்றால் நீங்கள் கந்த சஷ்டி கவசத்தை கேட்பதை நிறுத்தி விடலாம்.

எந்த காரியம் செய்கிறோம் , எந்த வார்த்தையை உச்சரிக்கிறோம் என்பது முக்கியமல்ல . ஒரு செயலை செய்த பிறகு நம் ஆழ்மனதில் எப்படி பதிவாகிறது என்பதுதான் முக்கியம்.

ஒரு காரியம் செய்த பிறகு நமது தன்மை ஒரு படி மேலே சென்று விட்டால் அது நல்ல காரியம்,  எனவே அதே தொடரலாம் . அல்லது ,ஒரு காரியம் செய்த பிறகு நமது நிலை ஒரு படி கீழே சென்றால் அந்த காரியத்தை நாம் நிறுத்திவிட வேண்டும்.

-- ஹீலர் பாஸ்கர்
www.anatomictherapy.org

உடல் இடுக்களில் வரும் அரிப்புகளை சரிசெய்ய - Healer Baskar


கேள்வி எண் 106 : தொடை இடுக்குகளில் அரிப்பு ஏற்படுகிறது, புண் வருகிறது .பல வைத்தியம் பார்த்துவிட்டேன் சரியாகவில்லை .சிலநேரம் சரியாகிறது மீண்டும் வருகிறது .இதற்கு நிரந்தர காரணம் என்ன ? தீர்வு என்ன ?.

பதில் : தொடை இடுக்குகளில் அரிப்பு புண் வருவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்

1.ஒன்று காற்றோட்டம் இல்லாதது.
2.நாம் அணியும் ஆடைகளில் தன்மை.
3. நாம் அமரும் இருக்கையின் தன்மை.

1.ஒன்று காற்றோட்டம் இல்லாதது.
இதற்கு முக்கியமான காரணம் காற்றோட்டம் இல்லாமையே. சில வருடங்களுக்கு முன்பு ஆண்களும் ,பெண்களும் துடைகள் மற்றும் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் காற்றோட்டம் இருக்குமாறு ஆடைகள் அணிந்து வந்தோம். ஆனால் இப்பொழுது நாம் அணியும் ஆடைகள் அந்த இடத்துக்கு காற்றோட்டத்தை செல்வதை தடைசெய்கிறது.

 எனவே தான் இதுபோன்ற அரிப்பும், புண்ணும் வருகிறது

 எனவே,  ஒன்று காற்றோட்டமான ஆடைகளை அணியவேண்டும் ,அல்லது எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது காற்றோட்டமாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

2. நாம் அணியும் ஆடைகளில் தன்மை.
 சுத்தமான பருத்தி ஆடைகளை அணிந்தால் இதுபோன்ற அரிப்புகள்  வராது ஆனால் ஆனால் நாம் அணியும் ஆடைகள் அனைத்தும் பாலிஸ்டர்,  ரெக்சின்,  உல்லன் , பிளாஸ்டிக் என்று உடலுக்கு துரோகம் செய்யும் ,உடல் வெப்பநிலையை கெடுக்கும் ஆடைகளே அணிகிறோம்.

எனவே 100 சதவிகித சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலமாக இதிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

ஜட்டி அணிவதற்கு பதிலாக அண்டர்வாயர் அணிந்தால் குணமாகும்.

பேண்ட் அணிவதற்கு பதிலாக வேஷ்டி அணிந்தால் குணமாகும்.

3. நாம் அமரும் இருக்கையின் தன்மை.
நைலான் , போம் , பிளாஸ்டிக், ரெக்சின் ஆகிய இருக்கைகளை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு,  மரம் ,இலவம் பஞசு அல்லது பருத்தி பஞ்சினால் ஆன இருக்கைகளில் அமர்ந்து சிறப்பு.

தொடை இடுக்குகளில் வரும் அரிப்பு மற்றும் புண்களுக்கு காற்றோட்டம் இல்லாததே காரணம் மேலும் காற்றோட்டம் கொடுப்பதே சிகிச்சை.

தேவைப்பட்டால் சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை அந்த இடத்தில் தேய்த்து வந்தால் குணமாகும்.

இப்படிக்கு 
ஹீலர் பாஸ்கர்
healerbaskar@gmail.com

Monday, November 4, 2019

சிலருக்கு உட்கார்ந்து தூங்கினால் ஏன் தூக்கம் வருவதில்லை - ஹீலர் பாஸ்கர்


கேள்வி எண் 105:
எனக்கு படுத்தால் உடனே தூக்கம் வருகிறது ஆனால் உட்கார்ந்து துவக்கினால் தூக்கம் வர மாட்டேங்குது. நீங்கள் உட்கார்ந்து தூங்குவது நல்லது என்று கூறி இருக்கிறீர்கள். எனக்கு குழப்பமாக இருக்கிறது.நான் என்ன செய்வது? 

பதில் : நான் உட்கார்ந்து தூங்குவது மிகவும் நல்லது என்று கூறியிருக்கிறேன் .ஆம் உண்மை. ஆனால் அது யாருக்கு என்றால் , படுத்தால் யாருக்கு தூக்கம் வருவதற்கு பல மணி நேரம் ஆகிறதோ அவர்களை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆரம்பத்தில் உட்கார்ந்து துவங்கி ,அதன் பிறகு படுத்து தூங்குவது நல்லது என்று கூறுகிறேன்.

உங்களுக்கு படுத்தவுடன் தூக்கம் வருகிறது என்றால் நீங்கள் உட்கார்ந்து தூங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவேளை படுத்தவுடன் தூக்கம் வருகிறது ஆனால் கெட்ட கெட்ட கனவு வருகிறது என்றால் நீங்கள் உட்கார்ந்து தூங்கி விட்டு பிறகு படுத்து தூங்கலாம்.

ஒருவேளை படுத்தவுடன் தூக்கம் வருகிறது ஆனால் தூங்கியது போலவே இல்லை, பகலில் உடல் அசதியாக இருக்கிறது , நான் நிம்மதியாக தூங்கியது போல் இல்லை என்று கூறினால், நீங்கள் முதல் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் உட்கார்ந்து கண்களை மூடி தூங்கி விட்டு அதன் பிறகு படுத்து தூங்கலாம்.

ஆனால் படுத்தவுடன் நன்றாக தூக்கம் வருகிறது,  எனக்கு கெட்ட கனவு எதுவும் வருவதில்லை , எனக்கு கனவே வருவதில்லை,  நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், எனக்கு அசதி இல்லை என்று கூறினால் ,நீங்கள் உட்கார்ந்து தூங்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இப்படிக்கு 
ஹீலர் பாஸ்கர்.
PH : +91- 9842452508.

தியானத்தின் போது கண்ணீர் - Healer Baskar


கேள்வி எண் 104 : தியானம் மற்றும் யோகா செய்யும் பொழுது கண்களில் கண்ணீர், வாயில் உமிழ் நீரும் சுரக்கிறது .இது நல்லதா?. கெட்டதா?.

பதில் : தியானம் செய்யும் பொழுது கண்களில் கண்ணீரும் வாயில் உமிழ்நீர் சுரக்கிறது என்றால் இது கெட்டது அல்ல, கண்டிப்பாக நல்லதே.

தியானம் செய்யும் பொழுது சிலருக்கு கண்களில் நீர் வரலாம் சிலருக்கு சளி வரலாம், சிலருக்கு காய்ச்சல் வரலாம், சிலருக்கு லூஸ் மோசன் எனப்படும் தண்ணீராக மலம் வரலாம், சிலருக்கு தூக்கம் வரலாம் ,சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படலாம், சிலருக்கு காது குடைய வேண்டும் போல் உணரலாம், சிலருக்கு வேர்வை வரலாம் ,சிலருக்கு சிறுநீர் வரலாம் ,சிலருக்கு மூத்திரம் வரலாம் சிலருக்கு உடல் அசதி வரலாம்.

இவை அனைத்துமே கெட்டது கிடையாது. கண்டிப்பாக நல்லதே,  இவை அனைத்தும் ஒருவருக்கே வராது இதில் ஏதாவது ஒன்றோ இரண்டோ மூன்றோ வரலாம். இல்லை வராமல் கூட இருக்கலாம்.

இதன் காரணம் என்னவென்றால், ஒன்று கழிவுகள் வெளியாகிறது,  இரண்டு அந்த உறுப்பு தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கிறது , மூன்று அந்த உறுப்பு தான் பல வருடமாக செய்ய முடியாத வேலையை இப்பொழுது சுதந்திரமாக செய்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடனே இதுபோன்ற விஷயங்கள் எத்தனை நாள் நடக்கும்?  என்று கேட்காதீர்கள் .அது எனக்கே தெரியாது . அவரவர் உடலில் உள்ள கழிவுகளை பொறுத்து , நோயைப் பொறுத்து சிலருக்கு ஐந்து நாளும் சிலருக்கு 50 நாளும் இப்படி மாறி மாறி நடக்கலாம் .எனவே எது வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் நல்லது என்று புரிந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக சாராயம் குடித்து விட்டு ஒருவர் சிரிக்கிறார் என்றால் சாதாரணமாக அவரால் சிரிக்க முடியவில்லை என்று அர்த்தம் . சாராயம் குடித்துவிட்டு ஒரு அழுகிறார் என்றால் அவர் சாதாரண வாழ்க்கையில் அழ முடியவில்லை என்று அர்த்தம் , சாராயம் குடித்துவிட்டு ஒருவர் ரோட்டில் போகும் நபரை அவருடன் வம்பு சண்டை இழுத்தால் அவருக்கு சாதாரணமாக வீரம் இல்லை என்று அர்த்தம் , சாராயம் குடித்துவிட்டு மனைவியை அடித்தால் அவருக்கு சாதாரணமாக மனைவிக்கு மேல் பயம் உள்ளது என்று அர்த்தம். 

 சாராயம் குடித்தால் எப்படி ஒருவர் தன்னால் முடியாத விஷயத்தை செய்கிராறோ , அது போல தியானம் யோகா என்பது இயற்கையான நல்ல  சாராயம்  . எனவே நமது உடல் பல வருடமாக செய்யமுடியாத நல்ல வேலைகளை ஆரம்பிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே யோகா , தியானம் செய்யும் பொழுது எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள், காத்திருங்கள், அது தானாக வரும் தானாக சரியாகிவிடும். கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். கண்டிப்பாக தியானமும் யோகாவும் உங்களுக்கு நல்லதையே செய்யும்.

இப்படிக்கு 
ஹீலர் பாஸ்கர்
www.anatomictherapy.org.

மௌனத்திற்கும் அமைதிக்கும் இடையேயான வித்தியாசம் - Healer Baskar


கேள்வி எண் 103 :மௌனத்திற்கு சும்மா இருப்பதற்கும் என்ன வித்தியாசம் ?

பதில் : மௌனம் என்பது பேசாமலிருப்பது. அதாவது வாயை வைத்து உச்சரிக்கும் பேச்சை முற்றிலுமாக நிறுத்துவதற்கு பெயர் மௌனம்.

மௌனத்தில் இருக்கும் பொழுது நீங்கள் கார் ஓட்டலாம் ,சமையல் செய்யலாம் ,டிவி பார்க்கலாம், நடக்கலாம் ,யோகா செய்யலாம்.

ஆனால் சும்மா இருப்பது என்றால்  எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பது. சும்மா இருக்கும் போது டிவி பார்க்கக்கூடாது ,கார் ஓட்ட கூடாது, சமையல் செய்யக்கூடாது ,பேசக்கூடாது எதுவுமே செய்யக்கூடாது.

மௌனத்தின் பொழுது வாயால் உச்சரிப்பால் பேசக் கூடாதே தவிர யோசிக்கலாம், சிந்திக்கலாம்.

சும்மா இருத்தல் என்றால் ,யோசிக்கும், சிந்திக்கும் செயலை மட்டும் தான் செய்யவேண்டும் .வேற எந்த செயலையும் செய்யக்கூடாது .தேவைப்பட்டால் நடக்கலாம், ஆனால் வேலை நிமித்தமாக நடக்கக்கூடாது. சும்மா நடக்கலாம் ,தேவைப்பட்டால் கழுத்தைத் திருப்பலாம்( உங்கள் கழுத்தை) , உட்காரலாம் ,நிற்கலாம் ,நடக்கலாம் ஆனால் இதற்கு ஒரு காரணம் இல்லாமல் விலங்கைப் போல குழந்தையைப்போல செய்ய வேண்டுமே தவிர, ஒரு வேலை செய்வதற்காக உடலுறுப்புகளை இயக்கக் கூடாது .சும்மா குழந்தைபோல இயக்கலாம்.

சும்மா இருப்பது என்றால் புதிதாக எந்த குப்பையையும் உள்ளே அனுப்பாமல் , ஏற்கனவே இருக்கும் குப்பைகளை வெளியேற்றம் செய்வதே ஆகும்.

மௌனம் என்பது வாய்க்கு மட்டும் பேசும் வேலையை கொடுக்கக்கூடாது ஆனால் மற்ற அனைத்து வேலைகளையும் செய்யலாம்.

சும்மா இருத்தல் என்பது மூளைக்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது.

இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

சும்மா இருத்தல் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் " சும்மா இரு"  என்ற தலைப்பில் எனது அமைதியும் ஆரோக்கியமும் என்ற மாத இதழில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் .இதை முழுவதுமாக படியுங்கள் உங்களுக்கு புரியும்.

இந்த கட்டுரை இன்று டெலிகிராமில் இணைத்துள்ளேன் படித்து புரிந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு 
ஹீலர் பாஸ்கர்.
+91-9944221007.

மூளையை தின்னும் அமீபா? உண்மையா?


கேள்வி எண் 102 : ஆற்றில் குளித்ததால் பாதிப்பு.... மூளையை தின்னும் அமீபாவால்  ( Brain Eating Amiba ) தாக்கப்பட்ட அமெரிக்க சிறுமி பரிதாப பலி !!!!!!!.இந்த செய்தி உண்மையா ???இது சம்பந்தமாக ஹீலர் பாஸ்கரின் கருத்து என்ன.

பதில் : இந்த செய்தியில் பாதி உண்மை பாதி பொய் இருக்கிறது . இந்த செய்தி சம்பந்தமாக நாம் கலந்தாய்வு செய்தால் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

ஆம் டெக்ஸாஸ் மாநிலத்தில் ,அமெரிக்காவில், 10 வயது சிறுமி ,இறந்து விட்டாள் ,என்பது உண்மை.

ஆனால் அதற்கு காரணம் மூளையைத் இன்னும் அமீபா என்பது பொய்.

எப்பொழுது ஊடகங்கள் ஒரு விஷயத்தை பெரிதாக காட்டுகிறார்களோ அதில் பாதி உண்மை இருக்கும் பாதி பொய் இருக்கும்

மேலும் இதன் நோக்கம் உலக மக்கள் மனதில் நல்ல விஷயத்தை கெட்டதாகவும் கெட்ட விஷயத்தை நல்லதாகவும் பதிவு செய்வதற்காக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆற்றில், குளத்தில் ,கடலில் ,வாய்க்காலில் கால்வாயில் ,குட்டையில் குளிப்பது மிக மிக நல்லது. இதனால் உடலுக்கு ஆரோக்கியம்.  பிராணசக்தி கிடைக்கும். எனவே நமது முன்னோர்கள் இதில் பல வருடமாக குளித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

நாம் இப்பொழுது யாருமே அதை செய்வதில்லை.  நூற்றில் ஐந்து சதவீத மக்கள் மட்டுமே செய்கிறார்கள். அந்த 5 சதவீத மக்களையும் அந்த காரியத்தை செய்ய கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு போலியான அறிவியலே இந்த மூளையை திண்ணும் அமீபா என்ற புது கதை.

அப்படி ஒரு அபிபா உலகத்தில் கிடையவே கிடையாது.

உண்மையில் அந்த சிறுமி இறந்ததற்கு வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்.

இந்த செய்தியை உலகம் முழுவதும் பரவச் செய்வதன் மூலமாக, நமது ஆழ் மனதில் ஆற்றில், குளத்தில் குளிப்பது ஆபத்து என்று பதிவு செய்யப்படும். நமது குழந்தைகள் மேல் உள்ள பாசத்தின் காரணமாக நாம் நமது குழந்தைகளை ஆற்றில், கிணற்றில் குளத்தில் குளிக்க கூடாது என்று தடை செய்வோம் . அல்லது வலியுறுத்துவோம். இதனால் நல்ல விஷயம் கெட்ட விஷயமாக மாறுகிறது.

இந்த செய்தியை மையமாக வைத்து , இனிமேல் உலகில் உள்ள அனைத்து ஆங்கில மருத்துவ சிலபஸிலும் மூளையைத் இன்னும் அமீபா என்று புதிதாக ஒரு கதை கட்டி , இனி ஒவ்வொரு மருத்துவரும் யாராவது காய்ச்சலில் மருத்துவமனைக்கு வந்தால், கடைசியாக ஆற்றில், குளத்தில் குளித்தீர்களா என்று கேள்வி கேட்பார்கள், நாம் ஆமாம் என்று சொன்னால்,  அதனால் தான் உங்களுக்கு காய்ச்சல் வந்து விட்டது, மூளையைத் இன்னும் அமீபா மூளைக்குள் சென்று விட்டது என்று பொய் சொல்லி நம்மை வைத்து கொடுமை செய்வார்கள்.

இதே போலத்தான் மலேசியாவில் கெடா மாநிலத்தில் ஒரு அருவியில் பலரும் பல வருடமாக குறித்து வந்தார்கள். திடீரென ஒரு நாள் ஊடகங்கள் எனப்படும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் இந்த அருவியில் மலைக்கு மேலே எலிகள் மூத்திரம் கழிப்பதால் அங்கு குளிக்கும் மக்களுக்கு தோல் வியாதிகள் வருகிறது என்று செய்தியை பரப்பினார்கள். அதன் பிறகு இப்பொழுது அந்த அருவிக்கு யாருமே செல்வதில்லை .எலி மூத்திரத்தால் ஆபத்து என்ற செய்தி அருவியில் குளிக்கும் நல்ல பழக்கத்தை கெட்ட பழக்கமாக மாற்றிவிட்டது.

திருப்பூரில் வீட்டில் பிரசவம் பார்த்த ஒரு பெண் இறந்ததை , உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்களும் காண்பித்து வீட்டில் குழந்தை பெற்றுக் கொள்வதால் ஆபத்து என்பதை அனைவரின் மனதிலும் பதிவு செய்து ,நல்ல மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என்றும்,  போலி மருத்துவர்களை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் என்றும் பறைசாற்றிக் கொண்டார்கள். மேலும் வியாபாரிகளுக்கு சாதகமாக பல சட்டங்களை இயற்றுவதற்கு இந்த செய்தியைஒரு காரணமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

சமீபமாக சிறுமிகளை கற்பழித்து கொலை செய்யும் பல செய்திகளை மீண்டும் மீண்டும் ஊடகங்கள் காட்டிக்கொண்டு இருப்பதற்கு என்ன காரணம் என்றால்,  உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரத்துடன் விபச்சார விடுதிகள் ஒவ்வொரு ஊரிலும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

திடீரென அரசு அங்கீகாரத்துடன் விபச்சார விடுதிகள் உருவானால், பொதுமக்கள் கோபப்படுவார்கள், ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று எப்பொழுதுமே ஒரு கெட்ட விஷயத்தை அரங்கேற்ற வேண்டும் என்றால் 5 வருடம் முன்பே இதற்கு பிளான் செய்து ரிவர்ஸ் வேலை செய்வார்கள்.

இப்படி சிறுமிகளை கற்பழித்து கொலை செய்யும் செய்தியை அடிக்கடி காண்பித்து விட்டு, விபச்சார விடுதி இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்களை குறைக்கலாம் என்று  பிரபல நடிகர்களும் ,சாமியார்களும் ,நீங்கள் நம்பும் உங்களது குருநாதரும் பேச ஆரம்பிப்பார்கள். அதன் பிறகு விபச்சார விடுதிகளை ஆரம்பிப்பார்கள். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தையும் வியாபாரிகள் உலகத்தில் அரங்கேற்றி வருகிறார்கள்.

ஆழ் குழாய் கிணறுகளை தமிழ்நாட்டில் இனிமேல் யாருமே புதிதாக போடக்கூடாது என்றும், ஏற்கனவே இருப்பதை மூடவேண்டும் என்றும் சட்டம் இயற்றுவதற்கு தயாராகி விட்டார்கள்.

இதற்காக சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

இப்பொழுது இரண்டு வயது சிறுவன் மணப்பாறை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இறந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் பேசி இதன் மூலமாக இனிமேல் யாருமே ஆழ்குழாய் கிணறு போடக்கூடாது என்று விரைவில் சட்டம் வரப்போகிறது.

ஏற்கனவே கோயமுத்தூரில் அனைத்து தண்ணீரையும் தண்ணீர் சப்ளையும் , குளம் ,குட்டைகளையும் பிரான்ஸ் கம்பெனிக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

இனி கோயமுத்தூர் மக்கள் தண்ணீரை பிரான்ஸ் கம்பெனியிடம் மட்டுமே விலைக்கு வாங்க வேண்டும்.

இதேபோல் ஈரோடு டையும் முழுவதுமாக தனியாருக்கு தண்ணீர் சப்ளை விற்றுவிட்டார்கள்.

இப்பொழுது சென்னை மெட்ரோ வாட்டர் முழுவதும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

விரைவில் தமிழகம் முழுவதும் தண்ணீர் தனியாருக்கு சொந்தமாக போகிறது,  அப்போது ஆழ்குழாய் கிணறுகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு வியாபாரம் நடக்கும்.

ஒருவேளை ஆழ் குழாய் கிணற்றில் விழுந்தது கலாநிதி மாறனின் பேரனாகவோ ,  தயாநிதி மாறனின் பேரனாகவோ , அல்லது மு க ஸ்டாலின் பேரனாகவோ ,  எடப்பாடியின் சொந்தகார பையனாகவோ , சசிகலாவின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் பேரனாகவோ  இருந்திருந்தால் ???? ஒருவேளை ஜெர்மன்,  பிரான்ஸ்,  சீனா,  சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொடர்புகொண்டு , அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி அங்கிருந்து ஸ்பெஷல் டிமை வரவழைத்து,  24 மணி நேரத்தில் அவர்கள் குழந்தையை ஒருவேளை காப்பாற்றி இருப்பார்கள். ஆனால் மாட்டிக்கொண்டது சாதாரண ஒரு பொதுமக்களின் குழந்தை.

தூத்துக்குடியில் பதிமூன்று பேரை , அரசாங்கம் காவல் துறை என்ற மாஃபியா கேங்கால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.  சுட்டது காவல்துறை தான் என்று ஆதாரபூர்வமாக நிரூபித்த முகிலனை,  கடத்தி , விஷ ஊசி போட்டு , நாயை வைத்து கடிக்க வைத்து , பைத்தியக்காரனாக்கி ,  பாலியல் வழக்கு போட்டு , இப்பொழுது  அவர் இப்பொழுது உயிரோடு இருக்கிறாரா இருந்தால் ,  எந்த நிலையில் இருக்கிறார் என்பதே தெரியாத இந்த தமிழகத்தில் வாழ்வது வேதனையாக இருக்கிறது.

இதைவிட மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் இனிமேல் பிறக்கப் போகும் அனைத்து குழந்தைகளுக்கும் உடலில் ஆர் எப் ( RF chip ) என்று ஒரு பொருளை வைத்து தைக்க போகிறார்கள் .இதை ஏற்கனவே தமிழகத்தில் பல மருத்துவமனைகளில்ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்காக பேக் வொர்க் என்ன செய்ய போகிறார்கள் என்றால் , இனிமேல் குழந்தை காணாமல் போனால் அதை ஊடகங்கள் பேச ஆரம்பிப்பார்கள் , இப்படி பல குழந்தைகள் காணாமல் போன பிறகு கண்டுபிடிக்க முடியாமல் பல குழந்தைகளை பொதுமக்கள் இழப்பார்கள் .அதன் பிறகு ஒருவேளை ஆர் எம் சிப் வைத்திருந்தாள் உடனே கண்டுபிடித்து விடுவோம் என்று நமக்கு கூறுவார்கள்.

நண்பர்களே ஊடகங்களில் வரும் ஒவ்வொரு விஷயத்திற்கும் என்னிடம் தனித்தனியாக கேள்விகள் கேட்காதீர்கள். ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது ஒரு கான்சப்ட் புரிந்து கொண்டால் ஆயிரம் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

சரி புரிந்து கொண்டோம் ,இதற்கு தீர்வு என்ன?

" இலுமினாட்டி களுக்கு தீர்வு"  என்ற பெயரில் எனது அமைதியும் ஆரோக்கியமும் என்ற மாத இதழில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் .அதை முழுவதுமாக படித்து விட்டு , அதில் நான் கூறிய விசயத்தை  உலக மக்களுக்கு பல மொழிகளில் சேர்த்துவிட்டு , அதை நிறைவேற்றினால் கண்டிப்பாக நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

" இலுமினாட்டி களுக்கு தீர்வு "என்ற கட்டுரை உங்களுக்கு வேண்டுமென்றால் healerbaskar@ gmail.com என்ற ஈமெயில் தொடர்பு கொள்ளுங்கள் , நாங்கள் உங்களுக்கு அனுப்புகிறோம்.

இப்படிக்கு 
ஹீலர் பாஸ்கர்
Healer baskar
pH ; +91 - 9944221007
pH : +91- 9842452508
www.anatomictherapy.org.
E mail : healerbaskar@gmail.com

1. One day class
2. Five day class
3. Yoga vipassana 3 days silent class
4. Monthly magazine
5. Thanthra class
6. Aammii organic shop
7. Banu home education
8. Ladies special class
9. Fine arts class for kids
10. Astrology class
11. Vasthu class
12. Bio enzime class
13. SUYASARBU 47 products manufaturing class.
14. Personal counselling
Ect..

தீபாவளி நேர எண்ணெய் குளியல் முக்கிய குறிப்புகள் - Healer Baskar

கேள்வி எண் 101 : தீபாவளி அன்று எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்?

பதில்:  தீபாவளி அன்று அம்மாவாசை நேரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் .

அதுவும் குறிப்பாக காலை பிரம்ம முகூர்த்தத்தில் மட்டும் தான் குளிக்க வேண்டும். கண்டிப்பாக நல்லெண்ணெய்யை பயன்படுத்தித்தான்  குளிக்க வேண்டும்.

 உதாரணமாக 2019 அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தீபாவளி வந்தது, அனைவரும் ஞாயிற்றுக்கிழமை காலை எண்ணெய் தேய்த்து குளித்து இருப்பீர்கள், ஆனால் அன்று 27ம் தேதி மதியம் அம்மாவாசை ஆரம்பித்து திங்கள்கிழமை மதியம் வரை அம்மாவாசை  இருந்தது. எனவே திங்கள் கிழமைதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கான சரியான நாளாகும் . ஆனால் அரசாங்கம் ஏதாவது ஒரு தேதியை அரசு விடுமுறையாக தீபாவளியாக கொடுக்கும். அந்த நாளை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அமாவாசை எந்த நாளில் விடியற்காலை வருகிறதோ அதுவே சிறந்த நாள் .

எனவே இனிமேல் தீபாவளியன்று திண  நாட்காட்டி அதாவது டெய்லி காலண்டர் ஐ பார்த்து அமாவாசை எப்போது ஆரம்பிக்கிறது, எப்பொழுது முடிகிறது என்று தெரிந்துகொண்டு அம்மாவாசை விடியற்காலை வரும் நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது.

 கண்டிப்பாக நல்ல எண்ணங்கள் மட்டும் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் பணம் இருக்கு என்பதற்காக ஆலிவ் ஆயிலில் குளிக்கக்கூடாது . வேறு எந்த எண்ணெயிலும் குளிக்கக்கூடாது நல்லெண்ணெய் குளியல் மட்டுமே சிறந்தது . அதுவும் தீபாவளி அன்று மட்டுமே சூரியன் உதிக்கும் நேரத்திற்கு முன்னால் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே சூரியன் உதிக்கும் நேரத்திற்கு முன்பு எண்ணை தேய்த்து குளிக்கலாம் வேறு எந்த நாளிலும் சூரியன் உதிப்பதற்கு முன்பு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது.  சூரியன் உதித்த பின்பு மட்டும்தான் குளிக்கவேண்டும் .

எனவே இந்த விஷயத்தை புரிந்து கொண்டு இனிமேல் வரும் தீபாவளி களில் நாம் அமாவாசை நேரம் பார்த்து , பிரம்ம முகூர்த்தம் ஆகிய சூரியன் உதிக்கும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு ஏதாவது ஒரு நேரத்தில் குறித்து நாம் பிரபஞ்ச சக்தியை ஒரு வருடத்திற்கு தேவையான ஆற்றலை பெற்றுக் கொள்வோமாக.

--- இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்.( Healer baskar) .
PH ; +91 - 9944221007
PH : +91- 9842452508
www.anatomictherapy.org.
E mail : healerbaskar@Gmail.com

Tuesday, January 1, 2019

ஒரு நாளை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கான சுயபிரகடனம் | Morning affirmations | Daily affirmations | Pasumarathaani

• நன்றி

• மற்றுமொரு அழகான நாளை எனக்கு பரிசளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி

• இன்று எனக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளுக்கு நன்றி

• இன்று எனக்கு கிடைத்த உணவு, உடை, இருப்பிடத்திற்கு நன்றி

• இன்று நான் சந்திக்க இருக்கும் சந்தோசமான சூழ்நிலைகளுக்கு நன்றி

• நான் பாதுகாப்புடனும், நிம்மதியாகவும் வாழ்கிறேன்

• என்னை சுற்றி அன்பும், அன்பானவர்களும் நிறைந்து இருக்கின்றனர்

• இன்று நான் கற்க இருக்கும் பாடங்களுக்கு நன்றி

• என் ஆரோக்கியமான உடல்நிலைக்கு நன்றி

• இன்று பல நல்ல செய்திகள் என்னை தேடி வந்து கொண்டிருக்கின்றன

• இன்று என் வாழ்க்கையின் சிறந்த நாளாக இருக்கிறது

• இன்று எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கு நன்றி

• நான் இன்று சந்திக்க இருக்கும் மனிதர்கள் சிறப்பானவர்கள்

• இன்று எனக்கு கிடைக்க இருக்கும் அளவற்ற அன்பிற்கு நன்றி

• இன்று நான் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு நன்றி

• இன்று என் மனம் அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது

• என்னை சுற்றி உள்ள அனைவரும் என்னை மதிப்பதற்கு நன்றி

• இன்று நான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தெளிவாகவும், சரியாகவும் இருக்கிறது

• என் வாழ்க்கையின் தொடர்ந்த முன்னேற்றத்திற்கு நன்றி

• என் பொருளாதார நிலை வேகமாக வளர்கிறது

• என் வாழ்க்கையில் நான் பெற்றிருக்கும் ஒவ்வொரு உறவுவுக்கும் நன்றி

• இந்த நாளை நான் மிகுந்த நன்றியுணர்வுடன் பார்க்கிறேன்

• இந்த சந்தோசமான இனிய நாளுக்கு நன்றி

நன்றி

நன்றி

நன்றிView this as video/audio by using this link. https://youtu.be/x4gB5h0eieI

New year's resolution in Tamil | புதுவருடத்திற்கான தீர்மானம் | 7 steps | Pasumarathaani

https://youtu.be/1-8HEUkJDYoவணக்கம்,

எப்போவும் போல நம்மள மாத்தி அமைச்சிக்க நாம தேர்ந்தெடுக்கும் அந்த நாள் இதோ வந்துடுச்சு.

இன்னைக்கு புது வருடப்பிறப்பு. எல்லோரும் அவங்கவங்க resolutions-அ plan பன்னிட்டு இருப்பிங்க.

ஆனா போன வருசம் மாறியே இந்த வருசத்துலயும் எடுக்குற resolution-ல தோத்துட கூடாது-னு உங்க மனசு உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கும். ஆனா சூழ்நிலைகள எப்படி face பன்னபோறோம்-னு ஒரு குழப்பம் மனசுக்குள்ள இருக்கும்.

உங்க குழப்பத்த போக்கதான் இந்த video

இப்போ நாம பாக்கபோற 7 எளிய வழிகள் பிறக்கப்போகும் புது வருசத்துத்துல நாம எடுக்கபோற resolution-அ வெற்றிகரமா செயல்படுத்த உங்களுக்கு உதவியா இருக்கும்-னு நம்புறோம்.

1. ஏதாவது ஒரு விசயத்தை மட்டும் resolution-ஆக எடுங்க:

பொதுவாவே புது வருடப்பிறப்புல நம்ம வாழ்க்கைய நாம மாத்தனும்-னு நெனைக்கிறோம் அல்லது வாழ்க்கை முறையை மாத்தனும்-னு நெனைக்கிறோம். அப்படி நினைச்சு நிறைய plan பன்னி நம்ம மனசுல நம்ம ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே மாத்திடபோறோம் அப்படிங்கிற எண்ணத்த உண்டாக்குறோம். ஆனா உண்மை என்னனா எடுத்த ஒரு தீர்மானத்துல கூட ஜெயிக்க முடியாம போய்டுது.

So, இந்த வழிமுறை சரியானது இல்ல.

அதனால முதல்ல ஏதாவது ஒரு விசயத்த மட்டும் கையில எடுங்க. உங்க மனசுக்குள்ள அத ஆழமா பதிவு செய்ங்க. தினமும் அத உங்க நினைவுக்கு கொண்டு வாங்க. நீங்க வெற்றிகரமா ஒரு resolution-அ செயல்படுத்தும்போது உங்களுக்குள்ள உத்வேகம் அதிகரிக்கும். அப்போ உங்க அடுத்த resolution-அ செயல்படுத்துங்க‌. எடுத்துக்காட்டுக்கு ஒரு மாதம் தொடர்ந்து உங்க முதல் resolution-அ செயல்படுத்தினதுக்கு அப்றோம் உங்க அடுத்த resolution-அ உங்க list-ல சேத்துக்கோங்க.

இந்த வழிமுறைய வரப்போற வருசத்துல தொடந்து பயன்படுத்தும்போது உங்களால நிறைய resolutions-அ வெற்றிகரமா செயல்படுத்த முடியும்.

நீங்க நினைச்ச மாதிரி புது மனிதராக நீங்க மாற வரப்போற வருசம் முடியும்வர உங்களுக்கு time இருக்கு.

இந்த வழிமுறை ரொம்ப யதார்த்தமான ஒரு வழிமுறையாவும் இருக்கும்.

40 கிலோ மீட்டர் இலக்க எங்கேயும் நிக்காம மாரத்தான் ஓடி நடுவுல முடியல-னு சொல்றத விட, பொறுமையா ஓய்வெடுத்து ஓய்வெடுத்து walking போயே அந்த இலக்க அடையலாம்.



2. முன்கூட்டியே திட்டமிடுங்கள்:

வெற்றியைப் பெற எப்போதும் முன்கூட்டிய திட்டமிடல் அவசியமாகுது.

முன்கூட்டியே திட்டமிடுவதால நீங்க தெளிவா உங்க தீர்மானத்த நோக்கி பயணிக்க முடியும்.

உதாரணத்துக்கு,

நீங்க புகைப்பிடிக்கும் பழக்கத்த நிறுத்தனும்-னு resolution எடுக்குறிங்கனு வைங்க. அதற்காக நீங்க library போய் புகைப்பிடிக்கிறத நிறுத்த உதவும் புத்தகங்களை படிக்கனும், இல்லைனா internet-ல கூட அதுக்கான வழிய தேடலாம்.

ஒரு resolution-அ வெற்றிகரமாக செயல்படுத்த தேவையானது அனைத்தையும் கைவசம் வச்சிருக்க உங்க தேடலும், ஈடுபாடும் அடிப்படையானது.



3. சவால்களை எதிர்கொள்ள நேரிடும்:

உங்க resolution-அ plan பன்னும்போது நீங்க சந்திக்க இருக்க சவால்கள உங்களால ஓரளவு கணிக்க முடியும். அத ஒரு list எடுங்க.

அது சூழ்நிலைகளையாகவோ, சுற்றி இருக்கவங்களாவோ இருக்கலாம். அத ஒரு List எடுங்க.

So, நீங்க எச்சரிக்கையா வெற்றிய நோக்கி பயணிக்க முடியும். அதிக உழைப்பு தேவைப்படும் சூழ்நிலைகள உங்களால கணிக்க முடியும் போது வெற்றியும் எளிதாகும்.



4. தொடங்குவதற்கான ஒருநாளை முடிவு செய்யுங்க:

நீங்க new year-லதான் resolution எடுக்கனும்-னு இல்லிங்க. உண்மையிலேயே நீங்க உங்க வாழ்க்கைல மாற்றத்த கொண்டுவர விரும்பறதுதான் முக்கியம். உங்கள சுத்தி சூழ்நிலைகள் சரியில்லாம இருந்தா கொஞ்ச நாள் போகட்டும்-னு free-ஆ இருங்க.

எடுத்துக்காட்டுக்கு: Leave-ல இருக்க உங்க குழந்தைங்க school-கு போனாதான் உங்களுக்கு resolution எடுக்க வசதியாக இருக்கும்-னா, அவங்க school February-லதான் open ஆகும்-னா அதுவர காத்திருங்க.

5. முழுமையாக செயல்படுங்க:

நீங்க தேர்ந்தெடுக்கும் அந்த நாள்ல இருந்து 100 சதவீத ஈடுபாட்ட கொடுங்க. உங்க resolution-அ உங்களுக்கு நியாபகப்படுத்த ஒரு சின்ன பேப்பர்ல எழுதி உங்க wallet-ல வைச்சிக்கோங்க. வீடு மற்றும் அலுவலகத்துல நீங்க அடிக்கடி பார்க்கும் இடங்கள்ல எழுதி ஒட்டிவைங்க. இதெல்லாம் உங்கள மேலும் மேலும் உத்வேகப்படுத்தும்.

6. தோல்வியை ஏற்று கற்றுக்கொள்ளுங்க:

இடையில ஏதாவது தோல்வி ஏற்பட்டா அதை ஏற்றுக்கொள்ளவும், அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் தயாரா இருங்க.

Smoke பன்ன கூடாது-னு இருந்த நீங்க ஒரு cigarette smoke பன்னிட்டா அதுக்காக காரணம் ஏதும் சொல்லாம அந்த தோல்வியை ஏத்துக்கோங்க.

உங்கள அந்த தவறை செய்யதூண்டிய சூழ்நிலைய குறித்து வைங்க. அடுத்த தடவை அந்த தவற செய்யாதிங்க.

7. பரிசு

சின்ன பரிசுகள் போதும் நம்மள பெரிய அளவுல உத்வேகப்படுத்த‌. வெற்றிகரமான உங்க resolution-னோட பயணத்துல ஒவ்வொரு வாரத்துக்கும் ஒரு பரிச உங்களுக்கு கொடுங்க.

அது ஒரு புத்தகமாகவோ, ஒரு பொருளாகவோ ஒரு பயணமாகவோ இருக்கலாம்.

ஓரிரு மாதங்களுக்கு அப்றோம் வாரத்துக்கு ஒரு பரிசு அப்படிங்கிறத மாதத்துக்கு ஒன்னு-னு கொடுங்க‌. ஆண்டு இறுதியில உங்கள நீங்க உத்வேகப்படுத்தும் வகைல பெரிய பரிசு ஒன்னு கொடுங்க.

இந்த வழிமுறையில கண்டிப்பா உங்களால ஜெயிக்க முடியும்.

இந்த வருடத்துக்கான உங்க plans & resolutions வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.